துளியை விடவும் சிறிய துளிக்கு என்ன பெயர்?
துமி என்றொரு பெயர் இருக்கிறது. கம்பர் இச்சொல்லை பயன்படுத்தியிருக்கிறார். இலங்கையிலிருந்து சீதையை மீட்டுவர பாலம் அமைக்கிறார்கள் வானவர்கள். குமுதன் தலையில் ஒரு படை கடலில் பாலம் அமைக்கிறது. அவர்கள் கற்களைத் தூக்கி கடலில் போடுகையில் திமி தம் என்று விழுந்து தண்ணீர் துமியாக தெரிகிறது.
"குமுதன் இட்ட குலவரை கூத்தரின்'திமிதம்' இட்டுத் திரியும் திரைக்கடல்
துமி தம் ஊர் புக, வானவர் துள்ளினர்
அமுதம் இன்னும் எழும் எனும் ஆசையால் "
கருத்துகள்
கருத்துரையிடுக