இடுகைகள்

நவம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இது எப்படி இருக்கு?

 நல்லா இருக்கு சூப்பரா இருக்கு செமையா இருக்கு கெத்தா இருக்கு பட்டாசா இருக்கு அட்டகாசமா இருக்கு ரகளையா இருக்கு தரமா இருக்கு சிறப்பா இருக்கு ஜம்முனு இருக்கு பக்காவா இருக்கு மாஸா இருக்கு டக்கரா இருக்கு அம்சமா இருக்கு அசத்தலா இருக்கு நொறுக்கலா இருக்கு அரட்டலா இருக்கு மிட்டாவா இருக்கு மஜாவா இருக்கு ஸோவா இருக்கு இருக்கு

பெரியகோட்டை

 தஞ்சாவூர் மாவட்டத்தில் வடுவூருக்கும் அருகில் பெரியகோட்டை,  சொக்கனாவூர் ஊர்கள் உள்ளன. இந்த ஊர்கள் கந்தர்வகோட்டையிலும் உள்ளன. 

திருமண மணடமும் ஏன் கட்சி அலுவலகமாகிறது?

 சென்னை லாயிட்ஸ் லேன் இல் எம்.ஜி.ஆருடன் வசித்த போது ஜானகி அம்மாவின் சொந்த வருமானத்தில் வாங்கப்பட்ட  அவ்வை சண்முகம் சாலையில் இருந்த மனையும் கட்டடமும்தான் தற்போது அதிமுக தலைமையிடமாக இருக்கிறது. 1972 ஆம் ஆண்டு அதிமுக தொடங்கிய போது அதன் அலுவவகமாக தானே முன்வந்து கொடுத்தார். பின்னர் 1987 ஆம் ஆண்டு கழகத்திற்காக எழுதிக் கொடுத்தார்.

வித்தை என்பது என்ன?

 எடுத்துக்கொண்ட சாதாரணத்தை தன் வித்தையால் அசாதாரணமாக மாற்றுவதே ஒரு தேர்ந்த மந்திரவாதியின் வித்தை - கிறிஸ்டோபர் நோலனின் பிரெஸ்டிஜ் திரைப்படத்தில் ஒரு வசனம்.

சொற்கள் எத்தகையது?

 சொற்கள் நம் சிந்தனையின் உடைகள். அவற்றை கந்தலுடனும் அழுக்குடனும் நாம் உடுத்தக் கூடாது என்கிறார் செஸ்டர் பீல்டு. 

ரகுமான் எனக்கு அப்பா மாதிரி என்கிறாரே மோகினி

  எ.ஆர். ரகுமான் அவரது மனைவியை விவகாரத்து செய்த அதே நாளில் அவரது இசைக்குழுவில் கிடார் வாசிக்கும் மோகினி அவரது கணவரை விவாகரத்து செய்தார். இருவரின் விவாகரத்தும் ஒரே நாளில் நடந்தேற பலரும் இருவரையும் தொடர்புப்படுத்தி பேசினார்கள். இதற்காக வருந்திய  மோகினி  ரகுமான் எனக்கு அப்பா மாதிரி என்று அறிக்கை வெளியிட்டார். அப்பா என்கிற சொல்லை தந்தை என்கிற சொல்லாக மட்டும் பொருள்கொள்ளப்பட வேண்டியதில்லை. கம்பராமாயணத்தில் வாலி இராமனை ஓரிடத்தில் அப்பா என்கிறான். " இரக்கம் எங்கு உகுத்தாய்? அப்பா !" என்பது அவ்வரி. அப்பா என்பது உயர்ந்தோரைக்குறிக்கும் சொல்.

கலை என்பது என்ன?

 கலையை மறைப்பதுதான் கலை  ஏழுபேர் நாவலில் கா.ந.சு எழுதியது