காவிரி நீரின் ஓசையைக் கேட்டது உண்டா?
ஆம் கேட்டிருக்கிறேன். அந்த ஆறு ஓடுகையில் உரல் உலக்கை இடிபடும் சத்தமும் அம்மி குழவியால் அரைபடும் சத்தமும் கேட்டிருக்கிறேன்.
ஏமன் என்பதால் குடியேறிய கிராமம் ஏமனூர் என்பது செவி வழிச்செய்தி. மேட்டூர் அணை கட்டுகையில் நீர்ப்பிடிப்பு பகுதியிலிருந்த பல ஊர்களில் ஒன்று ஏமனூர். 1930 ஆம் ஆண்டு அங்கேயிருந்து வெளியேற்றப்பட்டு மேட்டு நிலத்தில் குடியேற்றப்பட்டார்கள். 840 ஏக்கர் புறம்போக்கு நிலத்தைக் காட்டி அதில் விவசாயம் செய்துகொள்ள அதிகாரிகள் கூறினார்கள்.
இன்று 2000 மக்கட்தொகை கொண்ட ஊராக இருக்கிறது ஏமனூர். இந்த அணைக்குள் அனுமந்தராயன் கோவிலும் சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஜலகண்டேஸ்வரர் நந்தி சிலையையும் காண முடியும். தற்போது இந்த ஊரைவிட்டு போகச்சொல்லி அதிகாரிகள் கேட்கிறார்கள். காரணம் 1997 ஆம் ஆண்டு அன்றைய பொன்னாகரம் வட்டாட்சியர் எமனூர் மக்களுக்கு 464 வீட்டுமனை பட்டாக்கள் கொடுத்துள்ளார். அந்த பட்டாக்கள் செல்லாது என்று சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது .
கருத்துகள்
கருத்துரையிடுக